தமிழக அரசின் முடிவு: அரசு ஊழியர்கள் அதிர்ச்சி!

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58ஆக குறைக்கும் திட்டம் இல்லை என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் முடிவு:  அரசு ஊழியர்கள் அதிர்ச்சி!

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58ஆக குறைக்கும் திட்டம் இல்லை என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு நடத்திய ஆய்வில் 2020- 21-ம் நிதியாண்டுக்கு அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தாமல் இருந்து இருந்தால் ரூ.5 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்பட்டு இருக்கும் என்பது தெரியவந்தது. தற்போது மிழ்நாட்டில் சுமார் 9 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 3 சதவீதம் பேர் ஒவ்வொரு ஆண்டும் பணி ஓய்வுபெற்று வருகிறார்கள். அந்த வகையில் ஆண்டு தோறும் சுமார் 27 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறுகிறார்கள்.

ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு உடனுக்குடன் அதற்குரிய நிதி வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா பரவல் பிரச்சனை காரணமாக தமிழக அரசின் நிதி நிலைமையில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஓய்வுபெறும் போது அரசு ஊழியர்களுக்கு உடனடியாக நிதி கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நிலைமையை சமாளிக்க அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக தமிழக அரசு உயர்த்தி அறிவித்தது. இந்தநிலையில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்ததால் பொருளாதாரத்தில் எதிர்பார்த்த மேம்பாடு எட்டப்படவில்லை. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக அதிகரித்து உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் தமிழக அரசுக்கு செலவின வகைகளில் பல கோடி ரூபாய் மிச்சமானது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. தலைமையில் புதிய அரசு அமைந்ததும் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது மீண்டும் 58 ஆக குறைக்கப்படப் போவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியானது. ஆனால் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58ஆக குறைக்கும் திட்டம் இல்லை என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.