வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும்.! திமுக கூட்டணி கட்சி தலைவர் பேச்சு.! 

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும்.! திமுக கூட்டணி கட்சி தலைவர் பேச்சு.! 

தமிழக சட்டமன்றத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் 
 என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் தொடங்கி இன்றுடன் 6 மாதங்கள் ஆகிறது, இந்நாளை விவசாயிகள் கருப்பு நாளாக அறிவித்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளும் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 

அதன்படி சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) அலுவலகத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் , தலைமைக்குழு  உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கருப்பு கொடி ஏற்றினர்.  

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கே பாலகிருஷ்ணன் பேசும்போது, விவசாய விரோத சட்டங்களை வாபஸ் பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்திகற்காக 6 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், மோடி அரசின் அகங்காரம் சட்டத்தை வாபஸ் பெறமுடியாது என தெரிவிக்கிறது. மனிதாபிமான ஆட்சி கொரோனா தொற்றை கையாலுவதிலும் தோல்வியை சந்தித்து இருக்கிறது என குற்றசாட்டினார். 

மேலும் , செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க ஏன்? அனுமதி கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய பாலகிருஷ்ணன், தனியார் நிறுவனங்களுக்கு 4,000 கோடி நிதி அளித்து தடுப்பூசி தயாரிக்க வேண்டிய கட்டாயம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி ஆலையில் உற்பத்தி தொடங்கினால் தேவைக்கு அதிகமாக பெருமளவு தடுப்பூசி பற்றாக்குறை நீங்கும் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், விவசாய போராட்டம், கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் & மருந்துகள் இன்றி உயிரிழப்பு , பொருளாதாரம் திவால் என அனைத்திற்கும் காரணம் மத்தியில் ஆளும் மோடி அரசே என தெரிவித்த அவர்,  ஏழை மக்களை பட்ஜெட் மூலம் முட்டாளாக்கிறார் எனவும் குற்றம்சாட்டினார். 

அப்போது வேளாண் சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்த திமுக ஆட்சியில் உள்ள நிலையில் அந்த சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த பாலகிருஷ்ணன் புதிய வேளாண்  சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் திமுகவினால் தீர்மானம் கொண்டுவரப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.