மொத்தமா பியூஸ் பிடுங்கிய இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்: ஆனாலும் அடங்காத சசிகலா!

கொரோனா முடிந்த பின் அரசியலுக்கு வருவேன் என அதிமுக முன்னாள் நிர்வாகியிடம் சசிகலா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மொத்தமா பியூஸ் பிடுங்கிய இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்: ஆனாலும் அடங்காத சசிகலா!

கொரோனா முடிந்த பின் அரசியலுக்கு வருவேன் என அதிமுக முன்னாள் நிர்வாகியிடம் சசிகலா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக அதிமுக நிர்வாகிகள் சசிகலாவிடம் தொலைபேசியில் பேசி வரும் நிலையில், அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில், சசிகலாவிடம் தொலைபேசியில் பேசியதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட அதிமுக தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பில்மோர் ராபர்ட், மீண்டும் சசிகலாவிடம் பேசியுள்ளார்.

அப்போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் வருந்த வேண்டாம் எனக் கூறிய சசிகலா, தொண்டர்கள் எந்த பக்கம் இருக்கிறார்களோ அதுவே கட்சி என்றும், அது தான் ஜெயலலிதா காலத்திலும் நடந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், கொரோனா முடிந்தவுடன் மீண்டும் அரசியலுக்கு வருவதாகவும், தொண்டர்களைச் சந்திப்பதே தனது முதல் வேலை என்றும், அதுவரை பொறுமையுடன் இருக்கவேண்டும் என்றும் பேசியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.