19,082 வாக்குகள் வித்தியாத்தில் தோத்துப்போனப்பவே தெரியவேணாமா?ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்!!

19,082 வாக்குகள் வித்தியாத்தில் தோத்துப்போனப்பவே தெரியவேணாமா?ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்!!

ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமாரின் கல்வெட்டுகள் நீக்கப்பட்டது தொடர்பாக அவர் செய்திருந்த டிவிட்டிற்கு பெண் ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார். 

முன்னாள் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார், ராயபுரம் தொகுதியில் செய்த நலத்திட்டத்தின் அடையாளமாக பல இடங்களில் கல்வெட்டுக்கள் நாட்டப்பட்டிருந்தன. இவை அனைத்தும் நேற்று இரவோடு இரவாக திமுகவினர் நீக்கியதாக புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று இந்த சம்பவத்தை டுவிட்டரில் பதிவு செய்திருந்த ஜெயக்குமார்,  ராயபுரம் தொகுதியில் தான் மேற்கொண்ட நலத்திட்டப் பணிகளுக்கு சாட்சியாக இருந்த கல்வெட்டுக்களை தமிழக அரசு மறைப்பதாக கூறியுள்ளார். இதற்கு யார் காரணம்? மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்... என்று கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். 

இந்தநிலையில் அவருக்கு பதிலடி கொடுத்து பெண் ஒருவர் டுவிட் செய்திருந்தார். அதில் தொடர்ந்து பலமுறை ஜெயிச்ச நீங்க ராயபுரம் தொகுதிக்கு என்னத்த செஞ்சீங்க? அப்படி என்ன நலதிட்டங்களை செஞ்சி கொடுத்தீங்க ஜெயக்குமார்?
உங்க திறமையை கல்வெட்டில் தான் போட்டு வச்சிருக்கீங்க... 19 ஆயிறத்து 82 வாக்குகள் வித்தியாத்தில் தோத்துப்போனப்பவே தெரியவேணாமா? நீங்க என்னத்த செஞ்சீங்கன்னு? என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். 

ஆனால் அவருக்கு ஆதரவாக பேசிய மற்றொரு பெண், கல்வெட்டுகளை நீக்கினாலும்  பெயர் பலகைகளை அகற்றினாலும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ள எங்கள் பாசமிகு தலைவர் ஜெயக்குமார் பெயரை யாராலும் அகற்றிவிட முடியாது என்பதை திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

இதேபோல் அத்தொகுதியை சேர்ந்த மற்றொருவரும், ‘இக்கட்டான  கொரோனா காலத்தில் மாண்புமிகு அண்ணன் ஜெயக்குமார் இராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தது வரை தொகுதி முழுவதும் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஆனால் இன்று? இந்த திமுகவினர் கல்வெட்டுகளில் இருந்து தான் பெயரை அகற்ற முடியும், மக்கள் பணியாற்றி மக்களின் மனதில் வாழும் அண்ணன் ஜெயக்குமாரை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது.  

கிரீடம் அனைவரின் தலைக்கும் பொருந்தாது...  அதும் அடுத்தவரின் கிரீடத்தை பறிக்க நினைத்து சூடி கொள்வது கொஞ்சமும் பொருந்தாது. அது போல தான் இது. என்றும் ராயபுரத்தின் கிரீடம் எங்கள் அண்ணன் ஜெயக்குமார் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என ஆவேசமாக கூறினார்.