எம்.எல்.ஏ அலுவலகமா? இல்லை வட்டிக்கடையா? - பாஜக வானதி சீனிவாசனை கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்.! 

எம்.எல்.ஏ அலுவலகமா? இல்லை வட்டிக்கடையா? - பாஜக வானதி சீனிவாசனை கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்.! 

கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் பாஜகவை சேர்த்த வானதி சீனிவாசன் திறந்த புதிய எம்.எல்.ஏ அலுவலகத்தை வட்டிக்கடையா என இணையவாசிகள் கலாய்த்து வருகிறார்கள். 

கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் பாஜகவை சேர்த்த வானதி சீனிவாசன் வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து இந்த பகுதியில் புதிய எம்.எல்.ஏ அலுவலகத்தை வானதி சீனிவாசன் திறந்துவைத்து அங்கு பூஜைகள் செய்யப்பட்டது. 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  வானதி சீனிவாசன், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கோரிக்கையை விஷ்வ ஹிந்து பரிஷத் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறது என்றும், தமிழகத்தில் பல கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெற்று வருகிறது என்றும், மேல்மருவத்தூர் மற்றும் சமுதாய கோயில்களில் பெண்கள் பூஜை செய்து வருகின்றனர் என்றும்,இதில் தமிழ்நாடு அரசு புதிதாக எதையும் செய்யவில்லை என்றும் கூறினார். 

மேலும் கோயில்களில் ஆகம விதிப்படி தான், பூஜை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற அறிவுறுத்தி உள்ளது என்றும், இதில் பக்தர்களின் உணர்வு, கோயில் நிர்வாகத்தின் ஆலோசனையைக் கேட்டு, அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி நடக்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்த விழாவில் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. அதாவது புதிய எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து அதில் பூஜை செய்த போது அங்கு 'தனலாபம்' என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தது.

'தனலாபம்' என்ற வார்த்தை பொதுவாக செல்வம், பணவரத்து அதிகரிக்கும் என்று குறிக்கவே பயன்படுத்துவார்கள். இதன் காரணமாக வட்டிக்கடை, மளிகை கடை போன்ற கடைகள் திறக்கும் போதே இது போன்ற வார்த்தைகள் அதில் எழுதுவார்கள். நிலைமை இப்படியிருக்க மக்கள் சேவைக்காக திறந்த எம்.எல்.ஏ அலுவலகத்தில் இப்படி தனலாபம் என்று எழுதலாமா? இது  எம்.எல்.ஏ அலுவலகமா அல்லது வட்டிக்கடையா என்று இணையவாசிகள் கலாய்த்து வருகிறார்கள்.