2 நாள் டெல்லியில் முகாமிடும் தமிழக முதல்வர்.? இதற்காக தான் செல்கிறாரா.!  

 2 நாள் டெல்லியில் முகாமிடும் தமிழக முதல்வர்.? இதற்காக தான் செல்கிறாரா.!  

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். அப்போதிலிருந்தே கொரோனா பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

ஆட்சிக்கு வரும்முன்பில் இருந்தே பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஸ்டாலின். அது ஆட்சியை பிடித்தபின்பும் தொடருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை. தடுப்பூசி பற்றாக்குறை போன்றவற்றில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது திமுக. மேலும் ஜி. எஸ்.டி விவகாரத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேட்டியளித்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

இது ஒருபுறம் இருக்க ஒன்றிய அரசிடம் மாநில தேவைகளை பெற்றுத்தர நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவை தொடர்ந்து டெல்லியிலேயே முகாமிட வைத்து தமிழகத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசுக்கு நேரடியாக தெரியப்படுத்தி வருகிறார். அவரும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை அவ்வப்போது சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசிடம் ஒப்படைப்பது போன்ற முக்கிய விவகாரங்கள் தொடர்பாக நேரடியாக பிரதமர் மோடியை சந்தித்து பேச தமிழக முதல்வர் ஸ்டாலினே நேரடியாக டெல்லி செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.


இதற்காக இரண்டு நாள் பயணமாக கூடிய விரைவில் டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின் அங்கு பிரதமர் மோடி,மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கவிருப்பதாக திமுக வட்டாரத்தில் பேசப் படுகிறது.