தமிழகத்தில் சிறுபான்மையினர் மூன்றில் ஒரு பங்கு இருக்கிறார்கள்,.! காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ் பேச்சு.! 

தமிழகத்தில் சிறுபான்மையினர் மூன்றில் ஒரு பங்கு இருக்கிறார்கள்,.! காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ் பேச்சு.! 

தமிழகத்தில் சிறுபான்மையினர் மூன்றில் ஒரு பங்கு இருக்கிறார்கள் என தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். 

தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத்தின் புதிய தலைவராக தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு‌.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் பீட்டர் அல்போன்ஸ்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மையினர் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாத்திடும் வகையில் செயல்பட உள்ளதாகவும், மத சிறுபான்மையினர், மொழி சிறுபான்மையினர் இணைந்தால் மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கு இருப்பார்கள் எனக் கூறினார்.

மேலும் சிறுபான்மையினர் நலன் ஜனநாயகத்தில் பாதுகாத்திட வேண்டிய ஒன்று என தெரிவித்த அவர்,
சிறுபான்மை மக்கள் வாழ்வதற்க்கு திமுக அரசு பல்வேறு திட்டங்களை சட்டங்களை தொடர்ந்து இயற்றி வருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மை மக்கள் பாதுகாப்பு தர வேண்டும் என்ற அவர், தமிழக அரசின் தொலைநோக்கு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தான் எனவும், சமூக அமைதி சமூக நல்லிணக்கம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.