திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் மத்திய அரசுடன் இணக்கமான உறவையே கடைபிடித்து வருகிறோம்.! அமைச்சர் அதிரடி.! 

திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் மத்திய அரசுடன் இணக்கமான உறவையே கடைபிடித்து வருகிறோம்.! அமைச்சர் அதிரடி.! 

தமிழர்களின் நலன் பாதிக்கும் விவகாரங்களில் மட்டுமே மத்திய அரசை, தமிழக அரசு எதிர்த்து வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். 

நாகர்கோவிலில்,கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. இதனை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்த, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.  

அப்போது பேசிய அவர் தமிழகத்தில், திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் மத்திய அரசுடன் இணக்கமான உறவையே கடைபிடித்து வருவதாகவும்,தமிழர்களின் நலன் பாதிக்கும் விவகாரங்களில் மட்டுமே மத்திய அரசை, தமிழக அரசு எதிர்த்து வருவதாகவும், சர்ச்சைக்குள்ளான பேமிலி மேன் - 2 தொடரை சென்சார் மற்றும் கண்காணிப்பு செய்வதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.