இனி அவசியமாக தேவைப்படும் பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி.! தலைமைச் செயலாளர் உத்தரவு.! 

இனி அவசியமாக தேவைப்படும் பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி.! தலைமைச் செயலாளர் உத்தரவு.! 

தலைமை செயலகத்தில் அவசியமாக தேவைப்படும் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கடந்த 24ம் தேதி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கில் தலைமை செயலகத்தில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள் மட்டுமே செயல்பட அனுமதி எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது..  

இந்த நிலையில், தலைமை செயலகத்தில் அவசியமக தேவைப்படும் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், இணைநோய் உள்ள பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணிக்கு வருவதிலிருந்து முழு விலக்களிக்க வேண்டும் என்றும், நோய் தொற்று தடுப்பதற்கான உரிய வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்..