பத்ம சேஷாத்திரி பள்ளியை தொடர்ந்து மகிரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடந்த பாலியல் அத்துமீறல்.! இன்ஸ்ட்டாவில் வெளியிட்ட மாணவி.! 

பத்ம சேஷாத்திரி பள்ளியை தொடர்ந்து மகிரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடந்த பாலியல் அத்துமீறல்.! இன்ஸ்ட்டாவில் வெளியிட்ட மாணவி.! 

சென்னை கே.கே நகரில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் பணியாற்றிய ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், ஆன்லைன் வகுப்பில் அறைநிர்வாணத்தில் வகுப்பு நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இது பெரும் சர்ச்சையான நிலையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து தற்போது மற்றொரு பள்ளி மீது அதைப்போல குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள மகிரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது தன்னிடம் பாலியல் அத்துமீறல் செய்தார் என அவரிடம் படித்த மாணவி இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை எழுப்பியுள்ளது.


மகிரிஷி வித்யா மந்திர் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆனந்த். இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், பின்னால் அடிப்பதாகவும், மேலாடை தெரிந்தால் அதை அவராகவே இழுத்து உள்ளே விடுவது, கைகளுக்குள் அவருடைய கைகளை கோர்ப்பது போன்ற பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். 

மேலும் இது பற்றி கேட்டால் நான் உங்கள் தந்தை போன்றவர் என்றும், இது பற்றி புகார் அளிக்க சென்றால் சென்டிமெண்டாக பேசி சமாளிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ப்ரீத்தி நாராயணனிடம் புகார் அளித்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். 

அவர் பதிவிட்ட இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது. மேலும் இதேபோல பல பாலியல் அத்துமீறல் சம்பவங்களை மாணவிகள் சமூகவலைத்தளங்களில் வெளிப்படையாக கூறிவருவதும் தொடர்ந்து வருகிறது.