அன்புள்ள சகோதரி மதுவந்திக்கு ஒரு கடிதம்,.! பிராமின் என்று சொல்வதை விடுத்து நான் ஒரு மனுஷி என்று சொல்லுங்கள்.! 

அன்புள்ள சகோதரி மதுவந்திக்கு ஒரு கடிதம்,.! பிராமின் என்று சொல்வதை விடுத்து நான் ஒரு மனுஷி என்று சொல்லுங்கள்.! 

சென்னை கே.கே நகர் பி.எஸ்.பி.பி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் பற்றி பள்ளி நிர்வாகத்துக்கு முன்பே தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து பேசிய அந்த பள்ளியின் டிரஸ்டி மதுவந்தி இதை பிராமிண், பிராமிண் அல்லாதோர் என்று பார்க்காதீர்கள் என்று கூறியிருந்தார். ஆனால் இதற்கு முன் பேசிய அவர் நான் பிராமிண், பிராமின் என்பதில் பெருமை படுகிறேன், பிராமணர்களுக்கு மூளை வலிமை அதிகம் என கூறியிருந்தார்.    

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மதுவந்திக்கு எழுதியதாக பகிரப்படும் கடிதம் வைரஸ் ஆகிவருகிறது. அந்த கடிதத்தில் "அன்புள்ள சகோதரி மதுவந்திக்கு.!  தங்களின் பத்மா ஷேசாத்திரி பள்ளியில் நடைபெற்ற பாலியல் வன்மம்  குறித்து தாங்களின் பதிவுகள் வளைதளங்களில் வெளியாகி கொண்டு வருகிறது. பிரச்சினையை தாண்டி நான் பிராமின். நான் இந்து பிராமின் என்கிற வார்த்தை உங்களின் வாயில் இருந்து மிக அதிகமாகவே வெளிவருவதை காணமுடிகிறது. நீங்கள் தான் சாதியை இந்த பிரச்சினையில் மையப்படுத்தி  வருவதாகவே நாம் அறிய முடிகிறது.

எந்த ஒரு மனிதனும் அவனது பிறப்பால் உயர்வு , தாழ்வு இல்லை என்கிற கொள்கையில் மிக ஆழமான நம்பிக்கை கொண்ட என் போன்றோருக்கு இது போன்ற வார்த்தைகள் எந்த விதத்திலும் ஏற்புடையதாக தெரியவில்லை.  பிறப்பால் நிச்சயமாக வேறுபாடு எந்தவொரு நிலையிலும் இல்லை. இஸ்ரவேல் சமூகம் இன்றும் தாங்கள் தான் உயர்குடி மக்கள் என்கிற போதையில் இருப்பது போலல்வே உங்களது சாதிய பிதற்றல் உள்ளது.

 நாம் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகள் என்பது தான் உண்மை. ஒரு வேளை ஏதாவது ஒரு உறுதியான சித்தாந்தத்தின் அடிப்படையில் நீங்கள் பெறுமை கொள்ளலாம். பிறப்பால் நீங்கள் பெருமை கொள்ள எந்த ஒரு நிலையிலும் வாய்ப்பே இல்லை. இது ஒரு விதமான மாய போதை என்பதில்  எந்த சந்தேகமும் இல்லை.

மலம் அள்ளுபவனும் , உயர் சாதி என தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் சமூகமூம் ஒரு இரத்த விந்துவில் இருந்து தானே உருவாகினோம். உயர்சாதி என்கிற பெருமை கொள்பவர்கள் தங்க விந்தணுக்களின் மூலம் படைக்கப்படவில்லை என்பதை அன்பு சகோதரி மதுவந்தி போன்றவர்கள் முதலில் தெரிந்து கொண்டு பேச முற்பட வேண்டும். அதை விடுத்து நாம் மீண்டும் கற்கால நாகரீகத்திற்கு சென்று விடக்கூடாது.

தயவு செய்து நீங்கள் பொது களத்தில் பேசும் நன்கு படித்து விட்டு தரவுகளுடன் பேச முற்படுங்கள். வெறும் ஆங்கில அறிவு மட்டுமே அறிவுசார் அடையாளமாகி விடாது என்பதை மதுவந்தி உணர்ந்து பேச வேண்டும். 
இனியாவது நான் இந்து பிராமின்,பிராமின், பிராமின் என்று சொல்வதை விடுத்து நான் ஒரு மனுஷி, மனுஷி 
 எனக்கும் ரத்தமும் , சதையும் , உணர்வுகளும் இருப்பதை போல்தான் அனைவருக்கும் உள்ளது என்பதை அறிந்து பேச முற்படுங்கள் என்பதே எமது அன்பான வேண்டுகோளாகும்.!" இவ்வாறு இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.