கொடைக்கானல் நீர்நிலைகளின் தற்போதைய காட்சி!

கொடைக்கானல் நீர்நிலைகளின் தற்போதைய காட்சி!

தொடர் மழை காரணமாக கொடைக்கானல் மற்றும் மேல்மலை கிராமங்களில் அமைந்துள்ள 90 சதவீத நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியது.

தமிழகம் முழுவதும் மழை

தமிழ்நாட்டில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு ஆறுகளில் நீர் வரத்துகாரணமாக ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.

கொடைக்கானலில் தொடர் மழை

 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே தொடர் மழை பெய்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியில் விவசாயம் செய்யப்பட்டிருந்த விவசாய பொருட்கள் பெரும் சேதம் அடைந்து இருக்கின்றன.மேலும் தொடர் மழை காரணமாக அவ்வப்போது நிலச்சரிவுகளும் மரங்கள் முறிந்து விடுவதும் வாடிக்கையாகி வரக்கூடிய நிலையில் தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் இருக்கக்கூடிய நீர் நிலைகள் பெரும்பாலும் தொடர்ந்து நிரம்பி வருகிறது.

முழு கொள்ளளவை எட்டிய நீர் நிலைகள்

குறிப்பாக கொடைக்கானல் நட்சத்திர ஏரி தன்னுடைய முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது. மேலும் கொடைக்கானலில் மேல்மலை கிராமங்களான பூண்டி ,மன்னவனூர் ,கூக்கால்,  போளூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருக்கக் கூடிய அருங்காட்டுப்பள்ளம், கீழ்மடை பள்ளம்,வரங்கானல் அசன் குளம் , பரப்பாரு உள்ளிட்ட அணைகளும் ஏரிப் பகுதிகளாக இருக்கக்கூடிய கூக்கால் ஏரி, எலும்பள்ளம்  ஏரி, கோணலாறு உள்ளிட்ட பெரிய நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது. இது மட்டுமல்லாது சிறிய  நீர்த்தேக்கங்களிலும் தண்ணீர் வரத்து அதிகமாகவே காணப்படுகிறது. மேலும் இருக்கக்கூடிய ஒரு சில நீர்த்தேக்க பகுதிகளில் உடைப்புகள் இருப்பதால் நீர் முழுமையாக தேக்கப்படாத நிலை நீடித்து வருகிறது. மேலும் தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் இருக்கக்கூடிய அருவிகள் அனைத்திலுமே நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.