பி.எஸ்.பி.பி பள்ளிக்கு வக்காலத்து வாங்கிய கிஷோர் கே சாமி,..திணற திணற அடித்த நெறியாளர்,.. பதில் சொல்ல முடியாமல் கதறல்.! 

பி.எஸ்.பி.பி பள்ளிக்கு வக்காலத்து வாங்கிய கிஷோர் கே சாமி,..திணற திணற அடித்த நெறியாளர்,.. பதில் சொல்ல முடியாமல் கதறல்.! 

தனியார் தொலைக்காட்சியில் விவாதத்தில் பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கலந்துகொண்டார். இந்த விவாதத்தில் குற்றம்சாட்டப்பட்டு பி.எஸ்.பி.பி பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற முறையில் அவர் கலந்து கொண்டார். 

அந்த விவாதத்தில் பேசிய கிஷோர் கே சாமி பள்ளி நிர்வாகத்துக்கும் ஒய்.ஜி மகேந்திரனுக்கு நிர்வாகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். மேலும் இந்த விவகாரத்தில்  மகேந்திரன் மற்றும் மதுவந்தியை ஏன் விமர்சிக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதன் பின் ஒய். ஜி மகேந்திரனுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றால் அவர் ஏன் பள்ளி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார் என்று நெறியாளர்  கேள்வி எழுப்ப, அதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி  பள்ளி பிரச்சனையில் மகேந்திரன் ஏதும் சொல்ல முடியாது என்று கூறினார். 

அதன்பின் ஒய்.ஜி மகேந்திரனுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றால் ஏ.ஆர்.ரகுமான்  எங்கள் பள்ளியில் படித்தவர் என்று மதிவந்தி தானே சொன்னார்கள் என்று நெறியாளர் கேட்க அதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி  பள்ளி பிரச்சனையில் மகேந்திரன் ஏதும் சொல்ல முடியாது என்று கிஷோர் கே சாமி கூறினார். 

மேலும் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் துண்டோடு வந்தாரா இல்லையா? என்பது விசாரித்தால் தான் தெரியும் என்று கூறிய கிஷோர் கே சாமியிடம் அதற்கான புகைப்பட ஆதாரம் இருந்தும் நீங்கள் என் அவருக்கு வக்காலத்து வாங்கி பேசுகிறீர்கள்? என்று கேட்டார். அதன்பின் ராஜகோபாலன் குற்றவாளியா இல்லையா என்ற கேள்விக்கு என்னை பொறுத்தவரை தவறு செய்திருக்கிறார் என்று கூறினார்.இந்த விவாதம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.