காயத்ரிக்கு ஆதரவாக வந்த கஸ்தூரி..! மானம் கெட்ட பிழைப்பு என ஆவேசம்..!

காயத்ரிக்கு ஆதரவாக வந்த கஸ்தூரி..! மானம் கெட்ட பிழைப்பு என ஆவேசம்..!

பாஜகவில் இருந்து காயத்ரியை 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகையும் பாஜக ஆதரவாளருமான கஸ்தூரி தனது சமூக வலைதள பக்கத்தில் ஆவேச பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

திருச்சி சூர்யா:

திமுக எம்பி சிவாவின் மகனான திருச்சி சூர்யா, திமுகவில் இருந்து வெளியேறி கடந்த மே 8 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் திருச்சி சூர்யா. பாஜகவில் இணைந்த பின் திமுக நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். சில நேரங்களில் கடுமையான் விமர்சனம் வைக்கும் இவருக்கு திமுக நிர்வாகிகள் இவருக்கு பெரிதாக பதில் அளிக்கவில்லை.

Image

சர்ச்சை ஆடியோ:

திருச்சி சூர்யாவுக்கும், பாஜகவை சேர்ந்த சிறுபான்மை அணி தலைவர் டெய்சிக்கும் இடையே கட்சியில் பொறுப்புகளை வழங்குவது தொடர்பாக கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான டெய்சியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சூர்யா,டெய்சியை  நீ அண்ணாமலைக்கிட்ட போ.. மோடி, அமித் ஷா, நட்டாகிட்ட கூட போ.. உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது. உன்னை தீர்த்துடுவேன் என்று சொல்வதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சூர்யா பேசியதாக கூறப்படுகிறது. 

இதையும் படிக்க: யாராலும் தடுக்க முடியாது..! இடை நீக்கத்திற்க்கு பின் காயத்ரி ரகுராமின் அதிரடி பதிவு..!

பாய்ந்த காயத்ரி:

தமிழ்நாடு பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம், இந்த ஆடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, "பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு." என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அண்ணாமலை அறிக்கை:

இந்த ஆடியோ தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, சர்ச்சை ஆடியோ குறித்து விசாரித்து கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்துவதாகவும், 

காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்." என்று அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 

கஸ்தூரி காட்டம்:

இந்த நிலையில் நடிகையும் பாஜக ஆதரவாளருமான கஸ்தூரி, அந்த ஆடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, பேசுபவனை விட்டுட்டு பெண்களை தண்டிப்பதுதான் உங்கள் அரசியலென்றென்றால்... அதை விட மானம்கெட்ட பிழைப்பு உலகில் இல்லை என பதிவிட்டுள்ளார்.

மேலும், 2 மாதம் பழைய ஆடியோவில் திருச்சி சூர்யா சிவா, பாஜக சிறுபான்மை அணித் தலைவரை கொலை மிரட்டல் விடுப்பதுடன், பாலியல் அச்சுறுத்தலையும் விடுக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, ஜேபி நட்டா, அண்ணாமலை யாருமே தப்பவில்லை. ஆடியோ வெளியானதில் இருந்தே நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பேசியதற்காக காயத்ரி ரகுராம் தண்டிக்கப்பட்டு உள்ளார். சூர்யா மென்மையாக விடப்பட்டு விட்டார் என குற்றம் சாட்டியுள்ளார்.