தன் பெயரில் இருக்கும் கல்வெட்டுகள் அகற்றம்,.. மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என ஜெயக்குமார் ட்வீட்.! 

தன் பெயரில்  இருக்கும் கல்வெட்டுகள் அகற்றம்,.. மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என ஜெயக்குமார் ட்வீட்.! 

ராயபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமரின் பெயர் இருந்த கல்வெட்டுகளை திமுகவினர் அடித்து உடைத்ததாகவும், அதை சேதப்படுத்தியதாகவும் குற்றசாட்டு எழுந்த நிலையில் தற்போது அதற்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ராயபுரம் மக்களின் குடிநீர் தேவைக்கக தொகுதி மேம்பட்டு நிதியில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட கல்வெட்டையும் திமுகவினர் இரவோடு இரவாக இடித்து தள்ளியுள்ளனர். மேலும் ராயபுரம் எஸ்.என்.செட்டி தெரு, சேக் மேஸ்த்ரி தெரு, ஜி.ம். பேட்டை தெரு,அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட இடங்களில் திட்டத்தை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர் பெயர் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமரின் பெயர் இருந்த கல்வெட்டுகள், அங்கே போடப்பட்டிருந்த குழாய்களை திமுக வினர் அடித்து உடைத்துவிட்டதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர். 


இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "ராயபுரம் தொகுதியில் நான் மேற்கொண்ட நலத்திட்டப் பணிகளுக்கு சாட்சியாக இருந்த கல்வெட்டுக்களை மறைக்கிறது தற்போதைய தமிழக அரசு.. இதற்கு யார் காரணம்? மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.