மனைவியை கொலை செய்துவிடுவதாக மிரட்டல்,.. இளைஞரணி செயலாளர் என்று பாராமல் நடவடிக்கை எடுத்த போலீசார்.! 

மனைவியை கொலை செய்துவிடுவதாக மிரட்டல்,.. இளைஞரணி செயலாளர் என்று பாராமல் நடவடிக்கை எடுத்த போலீசார்.! 

குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவர் திமுகவில் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளராக இருக்கிறார். இவர் வித்யா என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்களுக்குள் அடிக்கடி தகராறும் நடந்து வருகிறது. 

இந்த சண்டை காரணமாக தனது மனைவி வித்யாவை அவரது தாயாருக்கு அனுப்பி வைத்துள்ளார் சுந்தர். அதன் பின் தனது 45 வயது காதலி வீட்டில் இருந்த போது அங்கு தனது குடும்பத்தினரோடு வந்த வித்யா கணவரை அடித்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தனது மனைவியுடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டு சில மாதங்கள் சேர்ந்து வாழ்ந்துள்ளார். அதன் பின் சுந்தர் மீண்டும் தடம் புரண்டதால் மீண்டும் பிரச்சனை உருவாகியுள்ளது. இதன் பின் அந்த வீடியோ தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் கொன்று விடுவேன் என மனைவியை மிரட்டியுள்ளார் சுந்தர். 

இதனால் தன்னை கொலை செய்வதாக மிரட்டல் விடுவதாக தனது கணவர் மீது குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் வித்யா. அவரின் புகாரின் பேரில் கணவர் சுந்தர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.