இன்று முதல் வீடு தேடி வரும் வருமுன் காப்போம் திட்டம்..

சாதாரண மக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்பதற்காக வருமுன் காப்போம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

இன்று முதல் வீடு தேடி வரும் வருமுன் காப்போம் திட்டம்..

சாதாரண மக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்பதற்காக வருமுன் காப்போம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்துவது, பொதுமக்கள் அனைவரையும் சுகாதார வளையத்துக்குள் கொண்டு வருவது போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.  அந்த வகையில் மக்கள் மருத்துவமனைகளை தேடி செல்வதை மாற்றி மக்களை தேடி மருத்துவத்தை கொண்டு சேர்த்தார். இந்த திட்டத்தில் இப்போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்துள்ளனர்.  அந்த வரிசையில் மருத்துவத்தில் அடுத்த புரட்சிகரமான திட்டத்தை இன்று தமிழக மக்களுக்கு அவர் அர்ப்பணிக்கிறார். 

சாதாரண மக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்பதற்காக வருமுன் காப்போம் என்ற திட்டத்தை கலைஞர் ஆட்சியில் இருந்த போது 2006-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி பூந்தமல்லியில் தொடங்கி வைத்தார். இப்போது இந்த திட்டம் கலைஞரின் வருமுன் காப்போம் என்ற பெயரில் மீண்டும் தொடங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.  இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஆயிரத்து 250 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.