கர்நாடகாவில் நடக்கும் சம்பவங்கள் தமிழகத்திற்கு வந்துவிடக் கூடாது - கமல்ஹாசன்

கர்நாடகாவில் நடக்கும் சம்பவங்கள் தமிழகத்திற்கு வந்துவிடக்கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது என கூறியுள்ளார்.  

முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.