தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழக்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரம், மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்சம் 28-29 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும்.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.