கல்லா கட்ட மதுக்கடைகளை திறப்பதா? ஹெச்.ராஜா ஆவேசம்!

முதல்வர், அமைச்சர்கள் கல்லா கட்ட மதுக்கடை திறப்பதா என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா, திமுக அரசை கடுமையான விமர்சனம் செய்தார்.

கல்லா கட்ட மதுக்கடைகளை திறப்பதா? ஹெச்.ராஜா ஆவேசம்!

முதல்வர், அமைச்சர்கள் கல்லா கட்ட மதுக்கடை திறப்பதா என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா, திமுக அரசை கடுமையான விமர்சனம் செய்தார்.

 காரைக்குடியில் உள்ள தனது வீட்டில் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் பேசிய பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழக அரசு மதுக்கடைகளை திறந்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது, கடந்த அதிமுக ஆட்சியின் போது கொரோனா காலத்தில் மதுக்கடை திறக்கப்பட்ட போது, ஸ்டாலின் வீட்டு வாசலில் ஸ்டாலின், கனிமொழி, துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அனைவரும் சேர்ந்து போட்ட கோஷம் எங்கே சென்றது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அமைச்சர்கள் கல்லா கட்ட மதுக்கடைகளை திறப்பதா?  அல்லது தமிழக மக்கள் கொத்து கொத்தாக இறப்பதற்காக திறந்துள்ளீர்களா? வடிவேலு கூறுவது போல் அது வேறு வாயி, இது வேற வாயா? தமிழக பாஜக இதனை வன்மையாக கண்டிக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோயில்கள் மூடப்பட்டுள்ள நிலையில்,  மதுக்கடைகளை திறப்பீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.