காலையிலிருந்து கஷ்டப்பட்டு டிரெண்ட் பண்ண கோவையன்ஸ்... ஒரே சம்பவம் செய்து சோலிய முடிச்ச ஸ்டாலின்!!

காலையிலிருந்து கஷ்டப்பட்டு டிரெண்ட் பண்ண கோவையன்ஸ்... ஒரே சம்பவம் செய்து சோலிய முடிச்ச ஸ்டாலின்!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கொரோனா ஆய்வு பணிக்காக கோவை சென்ற நிலையில், டிவிட்டரில் #Gobackstalin என்று ட்ரெண்ட் செய்த இணையவாசிகளை ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு  வாயடைக்க வைத்துள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார்.கடந்த சில நாட்களாக சென்னையை காட்டிலும், கோவையில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின், இன்று ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டது.

இன்று காலை 10:00 மணிக்கு ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். பின், அங்கிருந்து திருப்பூர் சென்று குமரன் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு கூடுதல்படுக்கை வசதிகளை திறந்து வைத்ததுடன், தற்காலிக பணியாளர் நியமனத்திற்கான பணி உத்தரவுகளையும் ஸ்டாலின் வழங்கினார். இரண்டு மாவட்டங்களில் ஆய்வு முடித்துவிட்டு மதியம, 12:30 மணியளவில், முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தார். கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர மண்டலத்துக்கு 10 வீதம் 50 கார்கள் இயக்கப்படும் திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதனையடுத்து கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கவச உடை அணிந்து கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்தார். 

இந்த ஆய்வுக்கு பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன், இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம் என நம்பிக்கை அளித்தார் பேசினார்.

#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்! என ட்வீட் போட்டுள்ளார்.

இந்த நெருக்கடியான கொரொனா தொற்று காலத்தில் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் GobackStalin என்று ட்ரெண்ட் செய்தனர் பிஜேபியினரே. ஒரே ஒரு சம்பவம் செய்து அந்த போட்டோவை போட்டதும்... காலையிலிருந்து கஷ்டப்பட்டு டிரெண்ட் பண்ண அத்தனையையும் சோலியை முடித்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின் என திமுகவினர் மார்தட்டி வருகிறார்கள்.