எங்களுக்கு டிக்கெட் கொடு...நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த பெண்கள்!

அரசு பேருந்துகளில் பெரும்பாலானவை பெண்கள் ஓசியிலேயே பயணம் செய்வதாக பேசிய கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுக்கு டிக்கெட் கொடு...நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த பெண்கள்!

தமிழ்நாட்டில் சமீப காலமாக அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் திமுகவைச் சேர்ந்த தமிழ்நாட்டு அமைச்சர்கள் பேசும்பொழுது தெரிவிக்கும் சில கருத்துக்கள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .

பொன்முடி கருத்து

இதன் ஒரு பகுதியாக திமுகவைச் சேர்ந்த  மூத்த அமைச்சர்களின் ஒருவரான பொன்முடி அவர்கள் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது அரசு அறிவித்த நலத்திட்டங்களில் ஒன்றான அரசு பேருந்துகளில் பெரும்பாலானவை பெண்கள் ஓசியிலேயே பயணம் செய்வதாக பேசிய கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

நடத்துனரிடம் வாக்குவாதம்

இதற்கிடையே கோவை சேர்ந்த அரசு பேருந்தில் பயணித்த நடத்துனரிடம் எனக்கு இலவசமாக பயணம் செய்வதற்கு சீட்டு வழங்க வேண்டாம். நான் இனிமேல் அரசு பேருந்தில் ஓசியில் பயணம் செய்ய மாட்டேன். ஒசியில் பயணம் செய்வதால் அமைச்சர்கள் கேலி செய்வது நிகழ்ச்சிகளில் பேசி கேவலப்படுத்துகிறார்கள் என உரத்த குரலில் நடத்துனரை கண்டித்து பணம் கொடுத்து டிக்கெட்டை பெற்று பயணம் செய்து சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாகியது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து பெருந்துறை நோக்கி செல்லும் 12 ம் நம்பர்  அரசு பேருந்து ஒன்று சித்தோடு வழியாக வந்து கொண்டிருந்தது. இதில் அந்தப் பேருந்தானது சித்தோடு அருகே உள்ள ராயர் பாளையம் எனும் பகுதியில் வந்தபோது அப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் இந்த பேருந்தில் ஏறியுள்ளனர்.

அப்போது பேருந்தின் நடத்துனரிடம் ராயர்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் சுமார் 3 மணி நேரமாக ஏராளமான அரசு பேருந்துகள் வந்து சென்றபோதும் பெண்களாகிய தங்களை பஸ்ஸில் ஏறுவதற்கு அனுமதிக்காமல் வேண்டும் என்றே பேருந்து ஓட்டுநர்கள் அங்கு பஸ்சை நிறுத்தாமல் சென்றதால் வெகு நேரம் கொளுத்தும் வெயிலில் காத்திருந்ததாகவும்

தன்மானம் தான் முதன்மையானது

சமீப காலமாக தமழ்நாடு அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்த நாள் முதல் பெரும்பாலான பேருந்துகளில் பெண்களை ஏற்றாமல் தவிர்த்து செல்வதாக அரசு பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே இனிமேல் தங்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் வேண்டாம்.

முதலமைச்சர் அறிவித்தபடி இலவசமாக எங்களைப் பேருந்தில் அழைத்துச் செல்ல வேண்டாம். பெண்களாகிய எங்களுக்கு தன்மானம் முக்கியம் என்பதை வலியுறுத்துவதற்காக இனிமேல் காசு வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுங்கள் இலவச பயணம் வேண்டாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முதலில் ஓரிரு பெண்கள் மட்டும் நடத்தினரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் நேரம் செல்ல செல்ல அப்ப பேருந்தில் இருந்த ஒட்டுமொத்த பெண்களும் இலவச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.