திருப்பி அனுப்பப்பட்ட நோயாளி உயிரிழப்பு... அரசு மருத்துவமனைக்கு போகாதீங்க.. இளம்பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ !!

திருப்பி அனுப்பப்பட்ட நோயாளி உயிரிழப்பு... அரசு மருத்துவமனைக்கு போகாதீங்க.. இளம்பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ !!

பெருந்துறையில் அரசு மருத்துவமனையில் படுக்கை கிடைக்காததால், தனது தந்தை உயிரிழந்து விட்டதாகக் கூறி மகள் கதறி அழும் வீடியோ பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.                                                          
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 550 படுக்கைகளே இருந்த நிலையில், கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு தற்போது 700க்கும் மேற்பட்ட படுக்கைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அரசு மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் தனது தந்தை உயிரிழந்ததாகக் கூறி இளம்பெண் ஒருவர் கதறி அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு ஈரோடு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காததால் தருமபுரிக்கு சென்றதாக இளம்பெண் கூறியுள்ளார். அங்கும் படுக்கை கிடைக்காததால் மீண்டும் பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சுமார் 4 மணி நேரமாக மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்ததாகவும் அப்பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஆனால், அங்கும் படுக்கையும்,  முதலுதவி சிகிச்சையும் கூட கிடைக்காத காரணத்தால், தனது தந்தை மருத்துவமனை வாசலிலேயே உயிரிழந்ததாகவும் அப்பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது தனது தந்தை உயிரிழந்து விட்டார் என்பதை உறுதி செய்ய கூட மருத்துவமனை நிர்வாகம் முன்வரவில்லை எனவும் அப்பெண் தெரிவித்தது மனதை கலங்கடிக்கச் செய்யும் வகையில் உள்ளது. 

எனவே தனது தந்தையின் உயிரிழப்புக்கு அரசு மருத்துவமனைகள் தான் காரணம் என்றும், யாரும் அரசு மருத்துவமனைக்கு போய் உயிரை விட வேண்டாம் எனவும் அப்பெண் அபலை குரலில் பேசியது காண்போரை அதிர்ச்சியடைய செய்கிறது.