‘முதல்வரே தயவு செய்து ராஜினாமா செய்யுங்க’..ஆலோசனை வழங்கிய காயத்ரி... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

‘முதல்வரே தயவு செய்து ராஜினாமா செய்யுங்க’..ஆலோசனை வழங்கிய காயத்ரி... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

தமிழக முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என ஆலோசனை வழங்கிய நடிகை காயத்ரியை இணையதளவாசிகள் விமர்சித்து வருகின்றனர். 

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவர் பொறுப்பேற்றது முதல் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. 

உயிரிழப்புகள் ஒரு பக்கம் மக்களை அச்சுறுத்தி வர, நோய் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இதுதவிர மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு என பல பிரச்சனைகளும் கூறப்பட்டது.

இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் ஒரு பக்கம் சமாளித்து வர, மக்கள் நலன் கருதி தளர்வுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. ஆனால் மக்கள் அதற்கு செவிசாய்ப்பதாகவும் தெரியவில்லை. உலகளவில் பெருந்தொற்றான இந்த நோயை கண்டும் அஞ்சாத பலர் சாலையில் வாகனங்களில் ஜாலி ரய்டு சென்றனர். இதனால் தொற்று பாதிப்பும் குறையவில்லை. இதைத்தொடர்ந்து தளர்வற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக இரு நாட்கள் ஊரடங்கிலிருந்து மக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 

இதனை அறிந்ததும், மக்கள் கடை வீதிகளில் அலையாய் திரண்டனர். இந்த ஊரடங்கு நடைமுறையை அரசு முறையாக செயல்படுத்தவில்லை.. திமுக அரசு திணறுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் சிலரும் தங்கள் பங்குக்கு கருத்துக்களை பதிவிட்டு விமர்சனங்களை வைத்து வருகின்றனர். 

இந்தநிலையில் பாஜக பிரதிநியும், நடிகையுமான காயத்ரி ரகுராம், முதல்வருக்கு ஒரு ஆலோசனை வழங்கி டுவிட் செய்துள்ளார். அதில் முதல்வரே என அன்போடு அழைத்து அவர், தொற்று நோய்க்கு  தன்னிடம் யோசனை இருப்பதாகவும், முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://twitter.com/BJP_Gayathri_R/status/1396378587767341060

காயத்ரியின் இந்த டுவிட்டை கண்டு கடுப்பான நெட்டிசன்கள் பலரும், அவருக்கு பாடம் நடத்தி வருகின்றனர். மேலும் முதல்வருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் போது ‘அன்புள்ள’ என்று ஆரம்பிக்காமல் மாண்புமிகு என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்றும், முதல்வரை ராஜினாமா செய்ய சொல்வதற்கு பதில், பிரதமரை ராஜினாமா செய்ய சொல் பைத்தியமே என்றும் பதிவிட்டுள்ளார் ஒரு இணையதள வாசி..

இதேபோல் மற்றொருவர் 
‘கண்டிப்பா பண்ணுவாரு மேடம் நீங்க "மாசம் ₹60,000 சம்பளம்னா வருசத்துக்கு எவ்ளோ" என்ற அஞ்சாம் வகுப்பு கணக்குக்கு பதில் கரெக்ட்டா சொன்னீங்கனா’ என்று கிண்டலடித்துள்ளார்.