முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள்.! -நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை.! 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள்.! -நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை.! 

கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்  மலர்களால் அலக்கரிக்கப்பட்டுள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மாவட்டத்திற்கு ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை  நினைவிடத்தில் மரக்கன்று நட்டு துவங்கி வைத்தார். அதே போல, கருணாநிதி நினைவிடத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபடும் 33 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சிவில் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, ஆர். எஸ் பாரதி, கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு, க. ராமசந்திரன், கே கே.எஸ் எஸ் ஆர். ராமசந்திரன் ஆகியோர் உடன் இருந்தார்கள். இதன் காரணமாக நினைவிடம் வளாகத்தை சுற்றியும் ஐநூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கருணாநிதியின் நினைவிடத்தில் "போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்" என எழுதப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது .