61 நாள்களுக்குப் பிறகு மீன் பிடி தடைகாலம் முடிவுக்கு வந்தது..!

61 நாள்களுக்குப் பிறகு  மீன் பிடி தடைகாலம் முடிவுக்கு வந்தது..!

மீன்பிடிக்க, கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கிய தடைக்காலம் 61 நாள்களுக்குப் பிறகு  நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.

மீன்களின் இனப்பெருக்கத்தை மேம்படுத்தும் வகையில் வங்கக் கடலில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க, கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கிய தடைக்காலம் 61 நாள்களுக்குப் பிறகு  நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.  இதனையடுத்து தமிழகம் முழுவதும் இன்று  விசைப்படக்குகள் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

மீன் பிடித்தடை காலத்தில் 20 குதிரை திறன் கொண்ட குறைவான பைபர் படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று வந்த நிலையில், தடை காலம் முடிந்து தற்போது 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் தற்போது எண்ணிக்கை குறைவான விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். இந்த கொரோனா காலத்தில் மீனவர்களுக்கு மீன் விற்பதற்கு பல்வேறு சிக்கல் உள்ளதால் மற்றும் டீசல் விலை உயர்வினால் பெரும்பாலும் விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.