பேனா சின்னம் தேவையா என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்!

பேனா சின்னம் தேவையா என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்!

மழையில் நெல்மணிகள் நனைந்து வரும் நிலையில் 80 கோடி ரூபாயில் பேனா சின்னம் தேவையா? என கேள்வி எழுப்பி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பேனா சின்னத்துடன் வந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சில விவசாயிகள் பேனா சின்னத்துடன் வந்து கலந்து கொண்டு வெளி நடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையில் அறுவடை செய்த குறுவை நெல் நனைந்து வரும் நிலையில் மெரினா கடற்கரையில் 80 கோடி ரூபாயில் பேனா சின்னம் அமைப்பது ஏன் என கேள்வி அனுப்பிய விவசாயிகள் இந்த 80 கோடி ரூபாயில் 10 நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கலாம் எனவும் யோசனை தெரிவித்துள்ளனர்.