போலி சிஎஸ்ஆர் காப்பி தயாரித்த 5 பேர் கைது... மேலும் 4 பேருக்கு வலைவீச்சு...

காவல் நிலையங்களில் வழங்கப்படும் சிஎஸ்ஆர் காப்பியை போலியாக தயாரித்த 5 பேர் கைது செய்து, தலைமறைவாக உள்ள 4 பேருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

போலி சிஎஸ்ஆர் காப்பி தயாரித்த 5 பேர் கைது... மேலும்  4 பேருக்கு வலைவீச்சு...

தூத்துக்குடி |  தூத்துக்குடி மாநகரில் போலியாக காவல் நிலையங்களின் வழங்கப்படும் சிஎஸ்ஆர் காப்பி உள்ளிட்டவற்றை போலியாக அடித்து வருவதாக தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் சத்யராஜுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இது தொடர்பாக தென்பாகம் காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி ரப்பர் ஸ்டாம்ப் கடை நடத்தி வரும் அசோகர், மற்றும் பொன்ராஜ், கிறிஸ்டோபர், இமானுவேல் காளீஸ்வரன், ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் படிக்க | லிஃப்ட் கேட்பது போல நடித்து கொள்ளையடித்த சகோதரர்கள் கைது...

இதில் இந்த கும்பல் காவல் நிலையங்களில் வழங்கப்படும் சிஎஸ்ஆர் காப்பியை கம்ப்யூட்டர் சென்டர் மூலம் போலியாக எடுத்து பயன்படுத்தியதும் மேலும் மாநகராட்சி மற்றும் வருவாய் துறை சார்பில் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை போலியாக அடித்ததும் தெரிய வந்தது.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள வருவாய் துறை அதிகாரிகளான தாசில்தார், வருவாய் ஆய்வாளர், விஏஓ உள்ளிட்ட பல்வேறு வருவாய் துறை அதிகாரிகளின் போலி முத்திரையுடன் கூடிய ரப்பர் ஸ்டாம்ப்  செய்து மோசடியில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்தது.

மேலும் படிக்க | கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது... 5 கிலோ கஞ்சா பறிமுதல்...

இதைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த தென்பாகம் காவல் துறையினர் இந்த கும்பலுடன் தொடர்புடைய தலைமறைவாக உள்ள தூத்துக்குடியை சேர்ந்த அழகுமுருகன், பெருமாள், விஜய்பிரபு, மகாராஜன், ஆகிய 4-பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் வழங்கப்படும் சிஎஸ்ஆர் காப்பி மற்றும் பல்வேறு வருவாய் துறை அதிகாரிகளின் சான்றிதழ்கள் மற்றும் போலி ரப்பர் ஸ்டாம்புகளை தயார் செய்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சிஎஸ்ஆர் என்பது பொதுமக்களால் அளிக்கப்படும் புகார்களுக்கு காவல் நிலையத்தில் காவல்துறை சார்பில் வழங்கப்படும் மனு ரசீது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் போலியாக பலர் மீது வழக்கு தொடரப்பட்டதாகவும், வழக்குகள் மூடப்பட்டதாகவும் ஏமாற்ற முடியும்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது...