எங்கள் ஆட்சியில் நோயாளிகளே இல்லை, திமுக ஆட்சியில் தான் மரண எண்ணிக்கை கூடுகிறது.! செல்லூர் ராஜு அதிரடி.! 

எங்கள் ஆட்சியில் நோயாளிகளே இல்லை, திமுக ஆட்சியில் தான் மரண எண்ணிக்கை கூடுகிறது.! செல்லூர் ராஜு அதிரடி.! 

அதிமுக அரசு கொரோனா தொற்றை சிறப்பாக கையாண்டது என்றும் திமுக சரியாக கையாளவில்லை என்றும் அதிமுக தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். திமுக ஆட்சியை முன்பே விமர்சித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தற்போது மீண்டும் விமர்சித்துள்ளார். 


இது குறித்து இங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் 'ஈபிஎஸ் ஒபிஎஸ் இரட்டைக்குழல் துப்பாக்கி. எங்களுக்குள் எதுவும் இல்லை. கட்சியை சிறப்பாக நடத்தி வருகின்றனர்" எனக் கூறினார். 
 
மேலும், "திமுக ஆட்சியில் தான் மரண எண்ணிக்கை கூடியுள்ளது. எங்கள் ஆட்சி காலத்தில் நோயாளிகளே இல்லையே. அதிமுக ஆட்சியில் நோயாளிகள் இல்லையென்பதால் ஆக்ஸிஜன் தேவை இல்லாமல் இருந்தது.மதுரைக்கு கொரானா தடுப்பூசி குறைவாக வந்துள்ளதாக மதுரை ஆட்சியர் தெரிவித்திருந்தார். அதிகளவு ஊசிகளை கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.பள்ளிக்கூடங்கள் பல திறக்காமல் உள்ள நிலையில் அங்கு கொரானா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் " எனக் கூறினார். 

தொடர்ந்து  பேசிய அவர் "தமிழகத்தை பொறுத்தவரை கொரானா தொற்று குறைந்துள்ளது. கட்டுப்படுத்தப்படுகிறது. ஊரடங்கு ஒரளவு கைகொடுத்துள்ளது" எனக் கூறிய அவர் "தற்போது பணப்புழக்கம் இல்லை. மக்கள் கஷ்டப்படுகிறார்கள். கூடுதலாக 5000ரூபாய் கொடுக்க முதல்வர் முன்வர வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார். .


அதோடு, "திமுக ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகளுக்கு மிரட்டல் உருட்டல் உள்ளது என எல்லோருக்கு தெரியும். எங்கள் ஆட்சியில் அதிகாரியிடம் நாங்கள் எந்தப்பிரச்சனைக்காகவும் நேரிலோ தனிப்பட்ட முறையிலோ பேச மாட்டோம். திமுக பிரமுகர் தலையீட்டால் ஜெய்ஹிந்த்புரம் ஆய்வாளர் மாற்றப்பட்டுள்ளார். இது ரவுடிசம் தலைதூக்குவதற்கான ஆரம்பம். திமுக ஆட்சிக்கு தேனிலவே முடியவில்லை, அதற்குள் ரவுடிசம் தலைதூக்குகிறது" என குற்றம் சாட்டினார்.