எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரையில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்!

எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரையில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்!

மதுரை வந்த தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்ர்.

பொதுக்கூட்டங்களில் பங்கேற்பு

மதுரை விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை மதுரை விமான நிலையத்தில் அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து விருதுநகர் செல்வதற்காக மதுரை திருமங்கலம் வழியாக மேலக்கோட்டை, சிவரக்கோட்டை, கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையிலான அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பழனிச்சாமிக்கு வீரவாள்!

அப்போது மேலக்கோட்டை பகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு வீரவாள் வழங்கிய வரவேற்றார். தொடர்ந்து கள்ளிக்குடி வழியாக விருதுநகரில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டு சென்றார்.