மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்!

வாரத்தில் 2 பாட வேளைகளை ஒதுக்கி, இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், நாட்டுப்புறக் கலை ஆகியவற்றில் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், கலைப் பண்பாட்டுச் செயல்களில் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அட்டவணையில் இணைக்க வேண்டும்

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம் என்றும், பள்ளி கால அட்டவணையில் இணைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் கலைஞர்களை பயன்படுத்தலாம்

மேலும் இதற்கென வாரத்தில் 2 பாட வேளைகளை ஒதுக்கி, இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், நாட்டுப்புறக் கலை ஆகியவற்றில் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கலைப் பண்பாட்டுச் செயல்பாடுகளை பயிற்றுவிக்க பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கலைஞர்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்றும், சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.