தஞ்சை பெரிய கோயிலுக்குள் செல்ல ஆடை கட்டுப்பாடு... கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

தஞ்சை பெரியக் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாகவும், இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.

இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் என வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோயிலில் சதய விழா, நவராத்திரி கலை விழா, சித்ரா பௌர்ணமி விழா, ஆஷாட நவராத்திரி விழா, ஐப்பசி மாத அன்னாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெரிய கோவிலுக்கு வரும் வெளிநாட்டினர், வெளி மாநில பக்தர்கள் என ஆண்களும், ஒரு சில பெண்களும் அரைக்கால் சட்டை அணிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் டிரஸ்கோடு என்ற ஆடை கட்டுப்பாட்டு அறிவிப்பு பலகையை கோயில் நுழைவாயில், காலனி பாதுகாக்கும் இடம் என இரண்டு இடங்களில் நேற்று முதல் வைக்கப்பட்டுள்ளது.

அதில் ஆண்கள் வேட்டி, சட்டை, பேண்ட் அணிந்தும் பெண்கள் புடவை, தாவணி துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் ஆகியவை அணிந்து வர வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.