இதை செய்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தமுடியும்.! -திமுக எம்.பி தயாநிதிமாறன் பேச்சு.!  

இதை செய்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தமுடியும்.! -திமுக எம்.பி தயாநிதிமாறன் பேச்சு.!  

பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய சென்னை எம்.பி.தயாநிதி மாறன்,ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் ஆகியோர் கலந்துகொண்டு 500 ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை நலத்திட்ட உதவியாக வழங்கினர்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று திமுக சார்பில் 500 குடும்பங்களுக்கு ரூ.1500 மதிப்புள்ள மளிகை பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. என்றும், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதே தீர்வு என்றும் கூறினார்.


மேலும், ஆயிரம் விளக்கு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு முறையாக செய்யப்பட்டு வருகிறது என்றும், லயோலா கல்லூரியில் கொரோனா சிகிச்சை அமைக்கப்பட்டுள்ளதுஎன்றும், அரசு தரப்பில் கட்டுப்பாடுகள் விதித்தாலும் பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார்.