திருவாரூரில் திமுக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்ததால் பரபரப்பு!

திருவாரூரில் திமுக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்ததால் பரபரப்பு!

திமுகவின் உட்கட்சி தேர்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளராக ஆனந்த் என்பவர் நியமிக்கப்பட்டார். ஆனால் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் ஏற்கனவே பதவி வகித்த விசு. அண்ணாதுரைக்கு பெரும்பான்மையான ஆதரவு உள்ளது.

இந்நிலையில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜாவின் தலையிட்டால் ஆனந்த் ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக  குற்றச்சாட்டி எழுந்துள்ளது. இதையடுத்து  நீடாமங்கலம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட திமுக கிளை செயலாளர்கள், ஒன்றிய பிரதிநிதிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் தங்கள் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளனர்.

அது மட்டுமின்றி அதற்கான கடிதத்தை திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் தாயார் நினைவகத்தில் வைத்து, தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க திமுக தலைவர் மு..ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்றனர். திருவாரூர் மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.