தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளதா? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!  

தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகள் மூலமாக டெங்கு நோய் பெருமளவில் கட்டுப்படுத்தபட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில்  டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி  வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு தாக்க செய்துள்ள அந்த மனுவில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 2715 தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கபட்டு தீவிர நடவடிக்கை எடுக்கபட்டதில் கடந்த  ஜனவரி மாதம் 402 பேர் டெங்கு பாதிக்கப்பட்ட நிலையில் ஜூன் மாத பாதிப்பு 54 பேர் என்று பெருமளவில் குறைந்து என தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்தார்.

மேலும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மொத்தம் 52 பேர் மட்டுமே டெங்கு நோயிக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நான்கு வாரத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.