இறந்தவர்களின் உடல்களை மயானங்களுக்கு கொண்டு செல்ல உதவி எண்ணை அறிவித்தது மாநகராட்சி.! 

இறந்தவர்களின் உடல்களை மயானங்களுக்கு கொண்டு செல்ல உதவி எண்ணை அறிவித்தது மாநகராட்சி.! 
Published on
Updated on
1 min read

இறந்தவர்களின் உடல்களை மயானபூமிகளுக்கு கொண்டு செல்வதற்கு 155377 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பேரிடர் காலத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று அல்லது இதர காரணங்களால் இறந்தவர்களின் உடல்களை மயானபூமிக்கு கொண்டு செல்வதற்கு மாநகராட்சி சார்பில் 15 அமரர் ஊர்தி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா அல்லது இதர காரணங்களால் இறந்தவர்களின் உடல்களை மயானபூமிகளுக்கு கொண்டு செல்வதற்கு மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டுள்ள 15 வாகனங்களின் சேவையை பெற 155377 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும்,
இந்த 15 வாகனங்களும் இந்திய செஞ்சிலுவை சங்கத்திடம் மாநகராட்சியின் சார்பில் இன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com