மக்களே சீக்கிரம் மின்கட்டணம் செலுத்துங்க... இன்றே கடைசி நாள்....

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

மக்களே சீக்கிரம் மின்கட்டணம் செலுத்துங்க... இன்றே கடைசி நாள்....

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர் ஆகியோர் தங்களது மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசி தேதி மே 31 ஆக இருந்த நிலையில், கொரோனா பேரிடர் காரணமாக, கடைசி தேதியை ஜூன் 15 வரை நீட்டித்து தமிழக மின்சாரத்துறை உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், நீட்டிக்கப்பட்ட கால அவகாசமானது இன்றுடன் நிறைவடைகிறது. தற்போது கொரோனா பெருந்தொற்று காலம் மற்றும் தொடர் முழு ஊரடங்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மின்சார கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.