கோவையை பதட்டமான இடமாக  மாற்ற  விடக்கூடாது-கே.பாலகிருஷ்ணன்!

கோவையை பதட்டமான இடமாக  மாற்ற  விடக்கூடாது-கே.பாலகிருஷ்ணன்!

பா.ஜ.க கோவையில் நடத்திய  ஆர்ப்பாட்டம் மூலம் அமைதியாக இருக்க ஆர்.எஸ்.எஸ் விரும்பவில்லை என தெரிகின்றது.

ரவுடியைப் போல பேசுகிறார்

நேற்று பேசிய பேச்சிற்காக அண்ணாமலையை கைது செய்ய வேணடும். மாநில முதல்வரை மிரட்டும் விதமாக அண்ணாமலை  பேசுகின்றார். காவல் துறையை மிரட்டுகின்றார். பேட்டை ரவுடியை போல பேசுகின்றார் அண்ணாமலை 356 சட்டத்தை பிரகடனப் படுத்தி ஆட்சியை கலைக்க திட்டமிடுகின்றனர்.

ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியலை என்பதால் கலைக்க முயற்சிக்கின்றனர். அரசியல் கட்சி தலைவர்  என்ற அடிப்படை  நாகரிகம் இல்லாத வகையில் அண்ணாமலை பேசுகின்றார். இந்த மாதிரி பேச்சை அனுமதிக்க கூடாது

ஆர்.எஸ்.எஸ் வாக்குமூலம்

தமிழ்நாடு அரசு இது போல பேசுபவர்களை நடமாட அனுமதிக்க கூடாது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து இருக்கின்றது. சென்னை, மதுரை நீதிமன்றங்கள்  வரம்புக்கு உட்பட்டு செயல்படுகின்றதா என தெரியவில்லை. ஆர்.எஸ். எஸ் அமைப்பு குறித்து நீதிமன்றத்தில் அந்த அமைப்பினர் ஏற்கனவே கொடுத்த வாக்குமூலங்களை பார்க்க வேண்டும்

காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு என்ன வேலை .காந்தியை  கொன்றதை கொண்டாடியவர்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கின்றனர். அந்தந்த ஊரில் காவல்துறை முடிவு செய்ய வேண்டியதை நீதிமன்றங்கள் முடிவு செய்கின்றன. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சியாக இருக்கிறது. பயங்கரவாத அமைப்பு பின்னால் செல்வது வேதனையானது.

கருத்தில் உடன்பாடில்லை

சவுக்கு சங்கர் கருத்தில் உடன்பாடு கிடையாது. ஆனால்  நீதிமன்ற அவமதிப்பில் அவருக்கு அதிகபட்சமாக தண்டணை வழங்கப்பட்டுள்ளது.  இதுவரை யாருக்கும் அந்தளவு தண்டணை கொடுத்தது கிடையாது. சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மனித நேய மனித சங்கிலி போராட்டம் அக்டோபர் 2 ல்  நடத்த இருக்கின்றோம்

மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்துள்ளது  பா.ஜ.க ,ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு கண்களை உறுத்துகின்றது. இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு பணமதிப்பு குறைந்த உள்ளது. பங்கு சந்தையில் வீழ்ச்சி போன்றவற்றை மூடி மறைக்க பாஜகவினர்  சச்சரவுகளை கிளப்பி திசை திருப்பி வருகின்றனர். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.