விநாயகர் சதுர்த்தி விவகாரம்: அரசு உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது!

பொது இடங்களில், விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும்  தடை விதித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

விநாயகர் சதுர்த்தி விவகாரம்: அரசு உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது!

விநாயகர் சதுர்த்தியின் போது, பொது இடங்களில்  சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச்சென்று  சிலைகளை கரைக்கவும் தடை விதித்து கடந்த மாதம் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறத்தது. இந்த அரசாணைக்கு  தடைவிதிக்கக்கோரி திருவள்ளூரைச் சேர்ந்த இல. கணபதி தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் கொரனோ காரணமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கபட்டுள்ள நிலையில், சிறிய அளவிலான சிலைகளை வைத்து வழிபடவும், சிறிய அளவிலான கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மதுபானக் கடைகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த காவல்துறை தேவையான நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ள நிலையில் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று சிலைகளை கரைக்கவும்  தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குறைந்தது 5 பேரை மட்டும் விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கரைக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

மத உரிமைகளை பின்பற்ற வாழ்வாதர உரிமை முக்கியமானது என்றும், பொதுநலன் கருதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசுபிறப்பித்துள்ள தடை உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.