கொரோனாவால் கர்ப்பிணி உயிரிழப்பு.! -நோய் பாதிப்பு இல்லாமல் பிழைத்த சிசு.!

கொரோனாவால் கர்ப்பிணி உயிரிழப்பு.! -நோய் பாதிப்பு இல்லாமல் பிழைத்த சிசு.!

கொரோனாவால் இந்தியா பெரும் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. அதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும்இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை. இந்நிலையில் கொரோனாவால் இறந்த பெண்ணின் 11 நாள் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 


பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சனி என்ற கர்ப்பிணிக்கு கொரோனா பாதிப்பு  கண்டறியப்பட்டது. இந்நிலையில் அவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பெற்ற 11 நாளில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் ரஞ்சனி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று இருக்குமா என்ற அச்சம் எழுந்தது.

இதன் காரணாமாக பிறந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்துபார்த்த போது அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. இதனால் அந்த குழந்தையை மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் ஒப்படைத்தது. கர்ப்பிணி இறந்தாலும் குழந்தைக்கு நோய் பாதிப்பு இல்லாதது அவரது உறவினர்களுக்கு சற்றே நிம்மதியை கொடுத்துள்ளது.