சென்னையில் கொரோனா பாதிப்பு  0.88% தான்,. அசத்தும் மாநகராட்சி நிர்வாகம்.!

சென்னையில் கொரோனா பாதிப்பு  0.88% தான்,. அசத்தும் மாநகராட்சி நிர்வாகம்.!

சென்னையில் கொரோனா நோயால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1%க்கும் கீழ் குறைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா 2ம் அலையில் தாக்கம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பரவ தொடங்கியது..குறிப்பாக மே மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு பின்பு படிப்படியாக குறைய தொடங்கியது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பிலும், சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன..

மே மாதம் 10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது..இருப்பினும் பொதுமக்களின் நலன் கருதி அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இருப்பினும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு,சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னையை பொருத்தவரை மே மாதத்தில் நாள் ஒன்றிற்கு கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்து, பின்பு படிப்படியாக குறைந்து தற்போது 252 ஆக குறைந்து, தினசரி பாதிப்படுவோரின் சதவீதம் 0.88% ஆக உள்ளது.

கொரோனா முதல் மற்றும் 2ம் அலையை ஒப்பிடுகையில் கொரோனாவால் தினசரி பாதிக்கப்படுவோரின் சதவீதம் இதுவே மிக குறைவு, குறிப்பாக, கொரோனா முதல் அலையின் போது சென்னையில் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 20.5% ஆகவும், குறைந்தபட்சமாக 1.2% ஆக இருந்தது.

அதேப்போல், இரண்டாம் அலையின் போது அதிகபட்சமாக 27.7% ஆகவும், குறைந்தபட்சமாக தற்போது 0.88% ஆகவும் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.