தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி...!

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு எட்டாயிரத்துக்கு கீழ் குறைந்ததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி...!

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு எட்டாயிரத்துக்கு கீழ் குறைந்ததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு படிபடியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக 7 ஆயிரத்து 817 பேருக்கு மட்டுமே  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து, 69 ஆயிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 182 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை தொற்று காரணமாக மொத்தம் 31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 17 ஆயித்திற்கும் அதிகமானோர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. சென்னையில் தொற்றின் பாதிப்பு வெகுவாக குறைந்து 455 பேர் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.