கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 162 கோடி விற்பனை

கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ஆண்டு ஒன்றிற்கு 162 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 162 கோடி விற்பனை

கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ஆண்டு ஒன்றிற்கு 162 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கூட்டுறவு துறை மூலம் 303 மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளுக்கு 20% வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வருவதாகவும், அதன் படி மாதம் தோறும் 13 கோடி முதல் 15 கோடி ரூபாய் வரை விற்பனை நடைப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த மருந்தகங்கள் நியாயவிலைக் கடைகள் போல் வெளி சந்தைகளில் மருந்து பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் பங்காற்றி வருவதாகவும்,  ஆண்டு தோறும் கூடுதலாக 60 கடைகள் வரை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

அந்த வகையில், ஆண்டு முழுவதும் சுமார் 162 கோடி ரூபாய் வரை கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் மருந்து பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் கடைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு பொதுமக்கள் கூடுதலாக பயனடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்..