தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

இருவரும் 2018 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

இரு விவசாயிகளுக்கு காலதாமதமாக பயிர் இழப்பீடு வழங்கிய தனியார் காப்பீடு நிறுவனத்தை தமிழ்நாடு வளர்ச்சி நிதிக்கு ரூ.2 லட்சம் செலுத்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மழை காரணமாக பயிர் சேதம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர் பகுதியில் சேர்ந்தவர் வெங்கடாசலம் இவரது மகன்கள் நடராஜன் மற்றும் ரவிச்சந்திரன். இதில் தென் கோவனூர் கிராமத்தில் நடராஜனுக்கு 6 ஹெக்டேர் நிலமும் ரவிச்சந்திரனுக்கு 5 ஹெக்டேர் நிலமும் உள்ளது. இவர்கள் இருவரும் 2016 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

அப்போது மழையின் காரணமாக பயிர்கள் சேதம் அடைந்ததால் | பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. அறிவிப்பின்படி நடராஜனுக்கு ரூ.3.34 லட்சமும், ரவிச்சந்திரனுக்கு ரூ2.80 லட்சமும் காப்பீடாக கிடைக்க வேண்டும். ஆனால் சகோதரர்கள் இருவருக்கும் பயிர் காப்பீடு கிடைக்கவில்லை.

நுகர்வோர் ஆணையம் உத்தரவு

இதையடுத்து இருவரும் 2018 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நடராஜன் வங்கி கணக்கில் டு.3.26 லட்சமும், ரவிச்சந்திரன் வங்கி கணக்கில் ரூ. 2. 37 லட்சமும் காப்பீடு நிறுவனத்தால் செலுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணையை விசாரித்து ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, பயிர் காப்பீட்டு நிறுவனம் விதிமுறைகளின் படி செயல்படவில்லை. எனவே பயிர் காப்பீடு நிறுவனம் புகார்தாரர் நடராஜனுக்கு, செலுத்த வேண்டிய பாக்கி காப்பீடு தொகையான ரூ.8,754, அவரது மன உளைச்சலுக்கு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ.10ஆயிரம் செலுத்த வேண்டும்.

 சேவை குறைபாடுனால் காரணமாக ரூ.1லட்சத்தை தமிழ்நாடு மாநில வளர்ச்சி நிதிக்கு காப்பீடு நிறுவனம் செலுத்த வேண்டும். இதேபோன்று புகார்தாரர் ரவிச்சந்திரனுக்கு, செலுத்த வேண்டிய காப்பீடு தொகை ரூ.43 ஆயிரம், அவரது மன உளைச்சலுக்கு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவு தொகை ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பயிர் காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும், அது மட்டுமின்று சேவை குறைபாடு காரணத்திற்காக தமிழ்நாடு மாநில வளர்ச்சி நிதிக்கு ரூ.1. லட்சம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.