தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு ஆற்றங்கரையை முழுமையாக சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு!

பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றின் கரை சீரமைப்பு பணிகளை தலைமைச்செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்.

வெள்ள நீரால் சேதம்

கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது கொசஸ்தலை(குறத்தியாறு) ஆற்றில் பல்வேறு இடங்களில் கரைகள் உடைந்து வெள்ள நீர் கிராமங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு ஆற்றங்கரையை முழுமையாக சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  

சீரமைப்பு பணிகள்

கொசஸ்தலை(குறத்தியாறு)  ஆற்றின் கரை சீரமைப்பு பணிகள் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. வெள்ளிவாயல் சாவடியில் கொசஸ்தலை(குறத்தியாறு) ஆற்றில் நடைபெற்று வரும் இந்த பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு, நீர்வளத்துறை முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோருடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நிறைவடையும் கட்டத்தில் பணிகள்

இதில் 80% பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதாகவும், எஞ்சியுள்ள பணிகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அப்போது அறிவுறுத்தினார்.