தமிழகத்தில் பாஜகவால் கை ஊன்ற முடியாது, கால் ஊன்ற முடியாது என்றார்கள்.,ஆனால்.? - பாஜக எல்.முருகன் பேச்சு.! 

தமிழகத்தில் பாஜகவால் கை ஊன்ற முடியாது, கால் ஊன்ற முடியாது என்றார்கள்.,ஆனால்.? - பாஜக எல்.முருகன் பேச்சு.! 
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை என்று சொன்ன நிலையில் அதை மீறி 4 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் 4 பேர் வெற்றிபெற்றனர். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திக்க தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தலைமையில் தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், காந்தி ஆகியோர் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தனர். 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், "கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க. கட்சி 4 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்று உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. வளர முடியாது. கை ஊன முடியாது. கால் ஊன  முடியாது. தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை என அனைத்து எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.விற்கு எதிராக ஒன்றுபட்டு வேலை செய்தனர். ஆனால் அதை மீறி 4 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்று உள்ளோம். புதுச்சேரியில் தமிழ் மண்ணில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி வந்து உள்ளது" எனக் கூறினார். 

மேலும், "தற்போது பாரத பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக டெல்லி செல்கிறோம். கட்சி தேசிய தலைவர் நட்டா மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com