
திருவாரூர் திருவிக கலை கல்லூரியில் நேற்று நடைப்பெற்ற திறந்த நிலை பல்கலை கழக தேர்வில் திருவாரூர் மாவட்ட BJP தலைவர் பாஸ்கருக்கு பதிலாக ஆள் மாறட்டம் செய்து திவாகர் என்ற இளைஞர் தேர்வு எழுதிய்போது. கண்பாணிபாளராக கையும் களவுமாக பிடிப்பட்டார்.
இதையடுத்துஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய திவாகரை அதிகாரிகள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே பஜக கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் ரமேஷ் தேர்வு எழுதி மாட்டிக்கொண்ட திவாகரை மாவட்ட தலைவர் பாஸ்கரின் உத்தரவுபடி தான் அழைத்துவந்து தேர்வு எழுத விட்டதாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து ஆள்மாறாட்ட வழக்கில் திவாகர்,ரமேஷ் ஆகியோரை நேற்று கைது செய்த காவல்துறையினர்.
ரமேஷ் வாக்குமூலத்தை வைத்து இன்று ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய வழக்கில்திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கரை இன்று கைது்செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.இதனிடையே மூடிந்த நான்கு தேர்வுகளிலும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதினாரா என்பது குறிதது விசாரணை நடைப்பெற்று வருகிறது.