‘பாபாராம்தேவை கைது செய்’ டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்...

‘பாபாராம்தேவை கைது செய்’  டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்...

பாபா ராம்தேவை கைது செய்ய வேண்டும் என்ற ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தது, அலோபதி மருத்துவர்களை கொதிப்படைய செய்துள்ளது.

இதையடுத்து தனது அவதூறு பேச்சுக்கு பாபா ராம்தேவ் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் நஷ்ட ஈடாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும்  இந்திய மருத்துவ சங்கத்தினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

மேலும் பாபா ராம் தேவ் மீது தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராம்தேவை கைது செய் என்ற ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.