ஆரியை ஜெயிக்கவச்சதே நான் தான்... காசு குடுத்து தான் ஜெயிச்சாரு!! அனிதா சம்பத் வெளியிட்ட ஆடியோ!

என்னாலதான் ஆரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிச்சாரு என தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசிய ஆடியோவை அனிதா சம்பத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆரியை ஜெயிக்கவச்சதே நான் தான்... காசு குடுத்து தான் ஜெயிச்சாரு!! அனிதா சம்பத் வெளியிட்ட ஆடியோ!

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 முடிஞ்சு 6 மாசம் ஆகும் நிலையில் திடீரென்று ரசிகர்களை குழப்பும் விதமாக பழைய கதையை கிளறி சர்ச்சைகள் கிளப்பி வருகின்றனர்.  அதிலும் கடந்த சீசன் இதற்கு முன் இல்லாத அளவுக்கு முடிந்த பின்னரும் ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் உள்ளே எப்படி சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் எப்படி சண்டை போட்டு பரபரப்பை கிளப்பினார்களோ,  வெளியே வந்தும் அதே சர்ச்சையை கிளறி வருகின்றனர்.

சமீபத்தில் தனியார் எண்டெர்டெயின்மெண்ட் இணையதளம் விருது விழாவில் பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் அந்த யூடியூப் சேனல் விமர்சகர்களை விமர்சித்து பேசியதும், அந்த வீடியோவை ஒளிபரப்பாததால்  விருதையும் பாலா திருப்பி அளித்து விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விருதை திருப்பிக் கொடுத்த பாலாஜி முருகதாஸுக்கு அனிதா சம்பத் ஆதரவாக பேசிய ஆடியோ வெளியாகி இன்னொரு பிரச்சனையை உருவாக்கியது. அதோடு ஆரி காசு கொடுத்து தான் ஜெயிச்சாரு என அனிதா சம்பத் பேசியதாக ஒரு கதை கிளம்பியது.

ஆனால், நான் ஆரிக்கு எதிராக தான் அப்படி எந்த கருத்தையும் சொல்லவில்லை. மேலும், தான் எப்பொழுதுமே பாலா மற்றும் ஆரிக்கு ஆதரவாகவே இருந்து வருவதாகவும். ரவீந்திரன் தான் இந்த பிரச்சனையை செய்வதாக அவருடன் பேசிய ஆடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து பரபரப்பை கிளப்பி உள்ளார் அனிதா சம்பத்.

அந்த ஆடியோவில் என்னாலதான் ஆரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிச்சாரு, 50வது நாளுக்கு பிறகு ஆரி பற்றிய நெகட்டிவ்களை வெளியே சொல்லாமல் மற்றவர்களின் நெகட்டிவ்களை அடுக்கியதன் காரணமாகத்தான் மக்கள் ஆரிக்கு ஓட்டுப்போட்டார்கள், ஆறி 100 நாட்கள் நடித்தார், அவருடைய நெகட்டிவ் பாய்ண்ட் வெளியிடவில்லை என ரவீந்திரன் பேசிய ஆடியோவை அனிதா ஷேர் செய்ய இருவருக்கும் இடையே முட்டிக் கொண்டது.

இதனைத்தொடர்ந்து, அனிதாவுக்கு ரவீந்திரன் பதிலடி கொடுத்த டிவீட்டில், ஜனவரி 28ம் தேதி ஒரு மணிநேரம் 21 நிமிடங்கள் என்னுடன் பேசும் போது எடுத்த ஆடியோ ரெக்கார்டு இது, இதனை வெளியிட உங்களுக்கு 6 மாத காலம் ஆனது ஏன் அனிதா? உங்களுடைய உண்மையான சாயம் வெளுத்து விட்டது. பாலா இப்போத்தான் உங்களை பற்றிய கேவலமான உண்மைகளை என்னிடம் போனில் பேசினார் கொளுத்திப்போட்டுள்ளார்.

ஆரி ஜெயிச்சது உங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வயிற்றெரிச்சல், நீங்களும் நானும் பேசிய ஆடியோவை சீக்கிரமாகவே ரிலீஸ் செய்கிறேன் என சொல்ல, ஏற்கனவே அனைத்து பெண் போட்டியாளர்களின் அமைதியை காலி பண்ணது பத்தாதா? என் அமைதியையும் கெடுக்கணுமா? அந்த ஆடியோவை நான் லீக் பண்ணல.. பாலா தான் பண்ணான்.. தைரியம் இருந்தா அவனுடன் மோதுங்கள் என ட்விட்டரில் ட்விஸ்ட் வைத்துள்ளார்.