அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி கொறடா மற்றும் துணைத் தலைவர் யார்? ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் தொடங்கியது எம்.எல்.ஏக்கள் கூட்டம்...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி கொறடா மற்றும் துணைத் தலைவர் யார்? ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில்  தொடங்கியது  எம்.எல்.ஏக்கள் கூட்டம்...

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 21ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின் எம்.எல். ஏக்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில்  அதிமுக சட்டமன்ற கொறடா மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக  ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து விவாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தவிர, கட்சியின் மற்ற நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை.